Pages

Saturday, April 27, 2013

சந்ஜீவாராயண் கோவில்

 

இந்த கோவில் காரிமங்கலம் நகரத்தில் இருந்து சுமார் 3 km  தொலைவில் கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது
இந்த ஆலயம் சந்ஜீவாராயண் மலை மீது அமைந்து உள்ளது இந்த மலைக்கு இந்த கோவிலில் உள்ள சுவாமியின் பெயரால் இந்த மலைக்கும் இந்த பெயர் வந்தது இந்த மலை சுமார் 350 மீட்டர் உயரம் உள்ள மலை ஆகும். இந்த மலை மீது விஷ்ணுவின் அவதாரம் ஆன சந்ஜீவாராயண் சுவாமி உள்ளது

இந்த கோவிலும் சில நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும் இந்த கோவிலின் பெயரில் சில நிலங்களும் இருந்தன அனால் கால போக்கில் எல்லாம் ஆக்கிரமப்பில் மறைந்து விட்டன ஆனாலும் இதற்க்கு உண்டான ஆதாரங்கள் இன்றும் உள்ளன

இந்த கோவிலின் மிக விசேசமான மாதம் புரட்டாசி மாதம் ஆகும் மேலும் எல்லா சனி கிழமையும் இந்த ஆலயம் திறந்து இருக்கும். இந்த மலை உச்சியில் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றபடுகிறது இந்த தீபத்தை காரிமங்கலம் நகரத்தில் இருந்தும் காணலாம்.

இந்த கோவிலை அடைய காரிமங்கலம் நகரில் இருந்து சுமார்  2 கீ மீ தொலைவில் உள்ள கட்டுசீகலஹல்லி என்ற கிராமத்தை  அடைந்து படிகளின் வழியாக மேலே செல்லலாம்
இந்த மலை மீது இயரக்கையாக அமைந்த சுனை ஒன்று உள்ளது இது கோடை காலங்களிலும் வற்றாத பெருமை கொண்டது.

இந்த மலை அடிவாரம் இயற்க்கை சூழ்ந்த பகுதி ஆகும் மேலும் மலையை சுற்றி மா மரங்களின் அழகு கண்கொள்ளா காட்சி ஆகும் இந்த மலை அடி வாரத்தில் ராமர் சன்னதி ஒன்று உள்ளது இந்த கோவிலில் ராமநவமி அன்று மிக விசேசம் ஆகும்
ஒரு முறை சென்று கடவுளின் அருள் பெற்று வாருங்கள்

 



பாலா...
+91 9965818701

No comments: